முந்திரி & பருப்பு வகைகள்

மாலத்தீவுக்கு 291 டன் பருப்பு ஏற்றுமதி செய்ய அனுமதி

பொதுத்துறை நிறுவனங்கள் வாயிலாக 2016-17-ஆம் ஆண்டு வரை மாலத்தீவுக்கு 291 டன் பருப்பு வகைகள் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.2014-15 முதல் 2016-17-ஆம் நிதி ஆண்டு வரை அரசியல் உறவு அடிப்படையில் அந்நாட்டிற்கு பருப்பு ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் அறிவித்துள்ளது. இதன்படி, அடுத்த மூன்று ஆண்டுகளில் அந்நாட்டிற்கு முறையே 87.85 டன், 96.63 டன் மற்றும் 106.29 டன் பருப்புகள் ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இதர நாடுகளுக்கு பருப்பு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் சப்ளையை அதிகரிக்கவும், விலை உயர்வை கட்டுப்படுத்துவும் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் பருப்பு ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. நம் நாட்டில் தேவையை காட்டிலும் பருப்புகள் உற்பத்தி சுமார் 40 லட்சம் டன் குறைவாக உள்ளது. இதனையடுத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இறக்குமதி செய்யப்படுகிறது.

நடப்பு ஆண்டில் பருப்பு உற்பத்தி 1.98 கோடி டன் அளவிற்கு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 98 லட்சம் டன் கொண்டை கடலையும் அடங்கும். ஆனால் கொண்டை கடலை உற்பத்தி 65 லட்சம் டன் அளவிற்கே இருக்கும் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். 2013 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் 14 லட்சம் டன் பருப்பு இறக்குமதியாகியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply