வணிகச் செய்திகள்

முதலீட்டு பொருட்கள் வரி குறைப்புக்கு வரவேற்பு

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிரு ப்பதாவது: மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பில் முதலீட்டு பொருட்களுக்கான கலால் வரி 12%த்தில் இ ருந்து 10% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 2% வரி குறைப்பால் பின்னலாடை ஏற்றுமதி தொழில்துறையினர்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் இத்துறையில் முதலீடுகள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு ள்ளது. தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியில் 343.84 கோடி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜவுளி  தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply