வணிகத் தொழில்நுட்பம்

முதல் முறையாக இலவச இண்டர்நெட் வசதியுடன் கூடிய சுற்றுலா பேருந்துகள்; மத்திய பிரதேச அரசு அறிமுகம்

முதல் முறையாக வை – பை இணைப்புடன் கூடிய சுற்றுலா பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய பிரதேச அரசு.

பேருந்தில் பயணம் செய்பவர்கள் அதிவேக இண்டர்நெட் வசதியை பெறும் வகையில், நவீன பேருந்துகளை மத்திய பிரதேச சுற்றுலாத்துறை அறிமுகம் செய்துள்ளது.

முதற்கட்டமாக, தலைநகர் போபாலில் இருந்து இந்தூர் வரை இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன. போபாலில் இருந்து இந்தூருக்கு செல்ல மூன்றரை மணிநேரம் ஆகிறது. இதில் ரூ.250 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக, பிசினஸ் கிளாஸ் பயணிகளுக்காகவும், மாணவர்களுக்காகவும் இந்த பேருந்து சேவை துவங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த பேருந்தில் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு வை-ஃபை இணைப்பை அக்சஸ் செய்ய பாஸ்வேர்டும் வழங்கப்படுகிறது. அதன்மூலம் அவர்கள் தங்களது ஸ்மார்ட்போன்கள், லேப்டாப் போன்ற கருவிகளில் இன்டர்நெட்டை இலவசமாக உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

7 பேருந்துகளில் இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் கட்டணத்தில் ஒரு ரூபாய் கூட அதிகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply