முந்திரி & பருப்பு வகைகள்

முந்­திரி ஏற்­று­ம­தியில் இந்­தியா சாதனை

கடந்த 2013–14ம் நிதி­யாண்டில், நாட்டின் முந்­திரி ஏற்­று­மதி, அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில் சாதனை படைத்துள்­ளது என, இந்திய முந்திரி ஏற்­று­மதி மேம்­பாட்டு கவுன்சில் (சி.இ.பி.சி.ஐ.,) தெரிவித்துள்ளது.
மதிப்­பீட்டு நிதியாண்டில், நாட்டின் முந்திரி ஏற்றுமதி, அளவின் அடிப்படை யில், 13 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.01 லட்சம் டன்­னி­லி­ருந்து, 1.14 லட்சம் டன்­னாக அதி­க­ரித்­துள்­ளது.முந்திரி எண்ணெய்மேலும், ரூபாய் மதிப்பின் அடிப்­ப­டை­யிலும், இதன் ஏற்­று­மதி,4,046 கோடி­யி­லி­ருந்து, 4,976 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.
கணக்­கீட்டு நிதி­யாண்டில், ஏற்று­மதிக்­கான ஒரு கிலோ முந்­தி­ரியின் சரா­சரி விலை, 439 ரூபாய் என்ற அளவில் இருந்­தது.சர்­வ­தேச நாடு­க­ளுக்­கான, முந்திரி எண்ணெய், வறுத்த முந்­திரி போன்ற முந்­திரி தயா­ரிப்­பு­களின் ஏற்­று­ம­தியும் சிறப்­பான அளவில் அதி­க­ரித்­துள்­ளது.குறிப்­பா

க, சென்ற நிதி­யாண்டில், முந்­திரி எண்ணெய் ஏற்­று­மதி, அளவின் அடிப்­ப­டையில், 9,192 டன்­னி­லி­ருந்து, 9,226 டன்­னாக வளர்ச்சி கண்­டுள்­ளது. மதிப்பின் அடிப்­ப­டை­யிலும், இதன் ஏற்று­மதி, 29.84 கோடி­யி­லி­ருந்து, 37.26 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.
தற்­போ­தைய நிலையில், நாட்டில் செயல்­பட்டு வரும், முந்­திரி தொழிற்­சா­லைகள், 20 லட்சம் டன்­னிற்கும்  அதி­க­மான முந்­திரி கொட்­டை­களை பதப்­படுத்தும் திறன் கொண்­டவை.ஆனால், உள்­நாட்டில், மூன்றில் ஒரு பங்கு தேவையை பூர்த்தி செய்யும்அள­விற்கே முந்­திரி கொட்டை கிடைக்­கி­றது.இதன் கார­ண­மாக, இத்­துறை சார்ந்த ஏற்­று­மதி நிறு­வ­னங்கள், முந்­திரி கொட்டை இறக்­கு­ம­தியை மட்­டுமே நம்பி­யுள்­ளன.இந்­நி­லையில், டால­ருக்கு எதி­ரான ரூபாய் மதிப்பு சரி­வ­டையும் போது, முந்­திரி ஏற்­று­மதி நிறு­வ­னங்கள் பெரும் பாதிப்­புக்­குள்­ளா­கின்­றன என்­பதுகுறிப்­பி­டத்­தக்­கது.
பயிரிடும் பரப்புசென்ற 2013 – 14ம் நிதி­யாண்டில்,முந்­திரி கொட்டை இறக்­கு­மதி, அளவின் அடிப்­ப­டையில், 8.92 லட்சம் டன்­னி­லிருந்து, 7.58 லட்சம் டன்­னாக சரி­வ­டைந்­துள்­ளது.இதே போன்று மதிப்பின் அடிப்­ப­டை­யிலும், இதன் இறக்­கு­மதி, 5,332 கோடி­யி­லி­ருந்து, 4,458 கோடி ரூபா­யாக குறைந்­துள்­ளது.சென்ற 2013 – 14ம் நிதி­யாண்டில், உள்­நாட்டில் முந்­திரி பயி­ரிடும் பரப்பு, 10 லட்சம் ஹெக்­டேரை தாண்­டி­யுள்­ளது.
இது, இதற்கு முந்­தைய நிதி­யாண்டில், 9.8 லட்சம் ஹெக்­டே­ராக இருந்­தது.மதிப்­பீட்டு நிதி­யாண்டில், இதன் உற்­பத்தி, 7.30 லட்சம் டன்­னி­லி­ருந்து, 7.40 லட்சம் டன்­னாக அதி­க­ரித்­துள்­ளது.கடந்த இரு­பது ஆண்­டு­களில், நாட்டின் முந்­திரி கொட்டை உற்­பத்தி, இரண்டு மடங்­கிற்கும் மேல் அதி­க­ரித்­துள்­ளது.இருப்­பினும், வியட்நாம் போன்ற போட்டி நாடு­க­ளுடன் ஒப்­பிடும் போது, நம்­நாட்டின் முந்­திரி உற்­பத்தி திறன் மிகவும் குறை­வாக உள்­ளது.
தற்­போ­தைய நிலையில்,உல­க­ளவில், முந்­திரி உற்­பத்­தியில், வியட்நாம் முத­லி­டத்தில் உள்­ளது. இந்­நாடு, கடந்த 1993ம் ஆண்டு, 69,100 ஹெக்­டேரில், 1.86 லட்சம் டன் கச்சா முந்­தி­ரியை உற்பத்தி செய்­தது.வியட்நாம்:கடந்த 2011ம் ஆண்டில், வியட்­நாமின் முந்­திரி பயி­ரிடும் பரப்பு, 3.31 லட்சம் ஹெக்­டே­ராக அதி­க­ரித்­த­துடன், இதன் உற்­பத்­தியும், 12.73 லட்சம் டன் என்ற அளவில் சிறப்­பாக வளர்ச்சி கண்டுள்­ளது.
தற்­போது, வியட்நாம், ஒரு ஹெக்­டேரில், 3.80 டன் முந்­திரி கொட்டை உற்­பத்தி செய்­கி­றது. இது, இந்­தி­யாவில், 772 கிலோ என்ற அளவில் மிகவும் குறைந்து காணப்­ப­டு­கி­றது என, உணவு மற்றும் வேளாண் கூட்­ட­மைப்பின் (எப்.ஏ.ஓ.,) புள்­ளி­வி­வ­ரத்தில்தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Leave a Reply