வணிகச் செய்திகள்

மும்பை துறைமுகத்தில் 600 கோடி செலவில் புதிய கன்டெய்னர் டெர்மினல்

பெரிய துறைமுகங்களில் கன்டெய்னர் டெர்மினல்களை அதிக அளவில் அமைப்பதன் மூலம் சர்வதேச அளவிலான வர்த்தகம் மேலும் வளர்ச்சியடையும் என்று மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். மும்பையிலுள்ள ஜவஹர்லால் நேரு துறைமுக வளாகத்தில், கப்பலில் இருந்து கன்டெய்னர்களை இறக்குவதற்கும் ஏற்றுவதற்காகவும் 330 மீட்டர் நீளத்திற்கான கன்டெய்னர் டெர்மினல் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.

பின்னர் அவர் பேசுகையில், ‘கன்டெய்னர்கள் கையாளப்படுவது அதிகரித்து வருகிறது. பெரிய துறைமுகங்களில் மேலும் கன்டெய்னர் டெர்மினல் அமைப்பதன் மூலம் சர்வதேச அளவிலான வர்த்தகம் இன்னும் வளர்ச்சியடையும். இங்கு உருவாக்கப்ப டும் புதிய டெர்மினல் மூலம் சர்வதேச அளவிலான தேவையை எதிர்நோக்க முடியும்’ என்றார். ‘இந்த புதிய டெர்மினல் 600 கோடி செலவில் வடிவமைத்தல், கட்டுதல், இயக்குதல் மற்றும் ஒப்படைத்தல் அடிப்படையில் அமைக்கப்படுகிறது. இந்த பணி அடுத்த ஆண்டு டிசம்பரில் முடிக்கப்படும். இது இந்த துறைமுகத்தின் 4வது முனையம்’ என்று துறைமுகத்தின் தலைவர் என்.என். குமார் பேசுகையில் குறிப்பிட்டார்.

நன்றி தினகரன்

Leave a Reply