வணிகச் செய்திகள்

மெக்ஸிகோவில் தடம் பதிக்கிறது ஓ.என்.ஜி.சி

லத்தீன் அமெரிக்க நாடான மெக்ஸிகோவில், இந்திய அரசுக்குச் சொந்தமான பெட்ரோலிய நிறுவனம் ஓ.என்.ஜி.சி விதேஷ் லிமிடட் தனது நடவடிக்கைகளைத் தொடங்கவிருக்கிறது.

இதற்கென, அந்நாட்டைச் சேர்ந்த பெட்ரோலியோஸ் மெக்ஸிகானோஸ் நிறுவனத்துடன் ஓ.என்.ஜி.சி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தம் ஓ.என்.ஜி.சி. (துரப்பணம்) இயக்குநர் அனில் பண்டாரி, பெட்ரோலியோஸ் மெக்ஸிகானோஸ் (துரப்பணம்) நிறுவன பொது இயக்குநர் ஹெர்னாண்டெஸ் கார்ஸியா ஆகியோரிடையே சனிக்கிழமை கையெழுத்தானது.

மெக்ஸிகோவின் கான்கன் நகரில் நடைபறும் உலக எண்ணெய் நிறுவனங்களின் மாநாட்டில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply