இறக்குமதி செய்திகள்

யூரியா இறக்குமதி 36 சதவீதம் குறைந்தது

நடப்பு ஆண்டு ஏப்ரல்-அக்டோபர் மாத காலத்தில் யூரியா இறக்குமதி 36 சதவீதம் குறைந்து 32.26 லட்சம் டன்னாக உள்ளது. உள்நாட்டில் உரம் உற்பத்தி ஆண்டுக்கு 2.20 கோடி டன்னாக உள்ளது. அதே சமயம் தேவைப்பாடு 3 கோடி டன்னாக உள்ளது.

பழைய கையிருப்பு

கடந்த ஆண்டு ஏப்ரல்-அக்டோபர் மாத காலத்தில் யூரியா இறக்குமதி 50.38 லட்சம் டன்னாக இருந்தது. பழைய கையிருப்பு அதிகம் இருந்ததாலும், இந்த ஆண்டு கரீப் பருவத்தில் பயிர் சாகுபடி நடவடிக்கைகள் குறைந்ததாலும் யூரியா இறக்குமதி கணிசமாக குறைந்துள்ளது என மத்திய உர அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.விவசாயிகள் பொதுவாக ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை ஆரம்பிக்கும் முன் கரீப் பருவ சாகுபடி பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்து விடுவார்கள். எனவே கரீப் பருவம் தொடங்குவதற்கு முன் உள்நாட்டு தேவைப்பாட்டை பூர்த்தி செய்யும் வகையில் தேவையான உரங்களை அரசு அமைப்புகள் இறக்குமதி செய்ய ஆரம்பித்துவிடும்.

இந்தியன் பொட்டாஷ், எம்.எம்.டி.சி. மற்றும் எஸ்.டி.சி. ஆகிய நிறுவனங்கள் வாயிலாக மத்திய அரசு உரங்களை இறக்குமதி செய்கிறது. இந்த 3 நிறுவனங்கள் தவிர கூட்டு நிறுவனமான ஓமிஃப்கோ மூலமாகவும் யூரியா இறக்குமதி செய்யப்படுகிறது.

2012-13-ஆம் நிதி ஆண்டில் 80 லட்சம் டன் யூரியா இறக்குமதி செய்யப்பட்டது. 2013-14-ஆம் நிதி ஆண்டில் இறக்குமதி 12 சதவீதம் குறைந்து 71 லட்சம் டன்னாக குறைந்தது. முந்தைய ஆண்டின் கையிருப்பு அதிகம் இருந்ததே இதற்கு காரணமாகும். மானியம்விவசாயிகளுக்கு சில்லறை விலையில் ஒரு டன் யூரியா ரூ.5,360 என்ற சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனை விலைக்கும், உற்பத்தி செலவிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை மத்திய அரசு உர நிறுவனங்களுக்கு மானியமாக வழங்குகிறது

Leave a Reply