வணிகச் செய்திகள்

ரூபாயின் மதிப்பில் சரிவு : ரூ.62.02

மும்பை : வாரத்தின் முதல்நாளில் இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு காணப்படுகிறது. இன்றைய(பிப்ரவரி 17ம் தேதி) வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15 மணி நிலவரப்படி), அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 காசுகள் சரிந்து ரூ.62.02-ஆக இருந்தது. முன்னதாக கடந்த வெள்ளியன்று ரூபாயின் மதிப்பு ரூ.61.93-ஆக இருந்தது.

பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பாலும், டாலரின் தேவை அதிகரித்து இருப்பதாலும் ரூபாயின் மதிப்பில் சரிவு காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்

Leave a Reply