வணிகச் செய்திகள்

ரெயில்வே துறையில் அன்னிய நேரடி முதலீடு அடுத்த வாரம் பரிசீலனை

ரெயில்வே துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது குறித்து மத்திய அமைச்சரவை குழு அடுத்த வாரம் பரிசீலனை செய்ய உள்ளது.

சரக்கு முனையங்கள், ரெயில்வே மேம்பாலங்கள் உள்ளிட்ட ரெயில்வே அடிப்படை கட்டமைப்பு திட்டங்களில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை (டீ.ஐ.பி.பி) வலியுறுத்தியுள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரெயில்வே துறை அடிப்படை கட்டமைப்பிற்காக 1,000 கோடி டாலர் முதலீடு தேவைப்படுகிறது. எனவே அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளது. மின்மயமாக்கல், அதிவிரைவு ரெயில் திட்டங்கள், இருப்பு பாதை மாற்றம் மற்றும் ரெயில்வே சரக்கு பெட்டிகள் உள்ளிட்ட இந்திய ரெயில்வே உள்கட்டமைப்பு திட்டங்களில் சீனா முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளது.

அதேசமயம், சீன முதலீட்டிற்கு அனுமதி அளித்தால் பாதுகாப்பு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அன்னிய நேரடி முதலீட்டின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆராய்வதற்காக ரெயில்வே அமைச்சகத்திலிருந்து தனி கமிட்டி ஒன்றை உருவாக்க வேண்டும் என டீ.ஐ.பி.பி. தெரிவித்துள்ளது

தினத்தந்தி

Leave a Reply