பொருள் வணிகம்

ரோஜா விலை வீழ்ச்சி

ரோஜா விலை வீழ்ச்­சியால், ஒரே மாதத்தில், 5 கோடி ரூபாய் அள­வுக்கு நஷ்டம் ஏற்­பட்­டுள்­ள­தாக, ஓசூர் விவ­சா­யிகள் தெரி­வித்­தனர்.

ஓசூர் பகு­தியில், 4,000 ஏக்­கரில், பசுமை குடில் அமைத்து, ரோஜா சாகு­படி நடக்­கி­றது. இங்கு சாகு­படி செய்­யப்­படும் ரோஜாக்கள், பிரான்ஸ், சிங்­கப்பூர், மலே­சியா, நியூ­சி­லாந்து மற்றும் அரே­பிய நாடு­க­ளுக்கும் ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கி­றது.கடந்த செப்­டம்பர் மாதம் முதல், ரோஜாக்­க­ளுக்கு போதிய விலை கிடைக்­க­வில்லை. ஒரு ரோஜா பூ உற்­பத்தி செய்ய, 3.50 காசுகள் செல­வா­கி­றது. இந்­நி­லையில் ஒன்று, 2.50 ரூபாய் என்ற விலையில், ரோஜாப்பூ விற்­ப­னை­யா­கி­றது. விவ­சா­யிகள் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

ஓசூர் சிறு விவ­சா­யிகள் சங்க நிர்­வாகி பால­சி­வப்­பி­ரசாத், பட்டன் ரோஸ் உற்­பத்­தி­யாளர் நந்தி கிருஷ்ணன் ஆகியோர் கூறி­ய­தா­வது:ஓசூர் மற்றும் கேரள மார்க்­கெட்டில், ரோஜாக்கள் விலை வீழ்ச்சி அடைந்­துள்­ளது. செப்­டம்பர் மாதம், 20ம் தேதி முதல் அக்­டோபர், 18ம் தேதி வரை, ஒரு ரூபாய்க்கு விற்­ப­னை­யான ரோஜா விலை,கடந்த நான்கு நாட்­க­ளாக, 2.50 ரூபா­யாக உயர்ந்தது.
ஆனால், உற்­பத்தி செலவு, 3.50 ரூபா­யாக உள்ள நிலையில், விவ­சா­யி­க­ளுக்கு நஷ்டம் ஏற்­பட்டு வரு­கி­றது. இதனால், பல விவ­சா­யிகள், ரோஜா சாகு­படி பரப்பை குறைத்து வரு­கின்­றனர். விலை வீழ்ச்­சியால், கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 5 கோடி ரூபாய் அள­விற்கு நஷ்டம் ஏற்­பட்­டுள்­ளது.இவ்­வாறு, அவர்கள் கூறினர்.

Leave a Reply