ஜவுளி & ஆயத்த ஆடைகள்

வங்காளதேசத்துக்கு ஜவுளி ஏற்றுமதியை உயர்த்த இந்திய நிறுவனங்கள் முயற்சி

இந்திய ஜவுளி நிறுவனங்கள் வங்காளதேசத்துக்கு ஏற்றுமதியை உயர்த்த முயற்சி செய்து வருகின்றன.

இந்தியாவின் ஜவுளி வர்த்தகத்தில் வங்காளதேசம் முக்கிய அங்கம் வகிக்கிறது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சீனா அந்நாட்டில் தனது சந்தை பங்களிப்பை அதிகரித்து வந்தது. இதனையடுத்து இந்திய நிறுவனங்கள் அந்நாட்டிற்கான ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

2014–ஆம் ஆண்டிற்கான சர்வதேச கலாச்சார வாரம் கோவாவில் நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சியில் 1,000 இந்திய மற்றும் 400 சர்வதேச பார்வையாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அமெரிக்கா, இங்கிலாந்து, வங்காளதேசம், துபாய், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து வர்த்தகர்கள் பங்கேற்றுள்ளனர். வங்காளதேசத்திலிருந்து 130 வர்த்தகர்கள் கலந்து கொண்டு தங்களது பொருள்களை கண்காட்சியில் வைத்தனர். இந்தியாவில் ஜவுளித் துறையில் புகழ் பெற்ற சூரத் நகரத்திலிருந்து மட்டும் வங்காளதேசத்துக்கு ரூ.1,000 கோடிக்கு ஜவுளி பொருள்கள் ஏற்றுமதியாகின்றன.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உந்துசக்தியாக திகழும் பல்வேறு துறைகளில் ஜவுளித் துறையும் ஒன்றாகும்.

 

நன்றி தினத்தந்தி

Leave a Reply