ஜவுளி & ஆயத்த ஆடைகள்

வரி ரீபண்டு தாமதத்தால் ஜவுளி ஏற்றுமதி பாதிப்பு

வரி ரீபண்டு தாமதத்தால் ஜவுளி ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த ஐந்து மாதங்களில் அனைத்து முக்கிய துறைமுகங்களிலிருந்தும் வர வேண்டிய வரி ரீபண்டு தொகை தாமதம் அடைந்துள்ளதால் ஏராளமான ஜவுளி ஏற்றுமதியாளர்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏற்றுமதி செய்யும் நோக்கத்துடன் இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களுக்கு செலுத்தப்படும் சுங்கவரி பின்னர் ரீபண்டு செய்யப்படுகிறது. அதாவது ஏற்றுமதி சரக்குகளில் உள்ள வெளிநாட்டு மூலப்பொருட்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்படுகிறது. குறித்த காலத்தில் வரி ரீபண்டு செய்யப்படாதபோது ஏற்றுமதியாளர்களுக்கு நிதி நெருக்கடி ஏற்படுகிறது.

பருத்தி ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர் மாணிக்கம் ராமசாமி இது குறித்து கூறும்போது, ‘‘சுங்க வரித்துறையினரிடம் ஏற்றுமதியாளர்கள் ரீபண்டு தொகையை விடுவிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை பலன் கிடைக்கவில்லை. சுங்க இலாகாவிடம் நிதி இல்லாததே தாமதத்திற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது’’ என்று தெரிவித்தார்.

Leave a Reply