இறைச்சி & முட்டை

வளைகுடா நாடுகளுக்கானமுட்டை ஏற்றுமதி சரிவு

வளைகுடா நாடுகளுக்கு, பாகிஸ்தானிலிருந்து குறைந்த விலையில், முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுவதால், நாமக்கல் மண்டலத்தில், முட்டை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது’ என, ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் முட்டை ஒருங்கிணைப்பு மண்டலத்தில், 1,500க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. அதில், 4 கோடி கோழிகள் வளர்க்கப்பட்டு, தினமும், மூன்றரை கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
மேற்கண்ட மொத்த உற்பத்தியில், 80 லட்சம் முட்டை கேரளாவிற்கும், 80 லட்சம் முட்டை உள்ளூர் விற்பனைக்கும், 70 லட்சம் முட்டை, அரசின் சத்துணவுத் திட்டத்திற்கும் அனுப்பப்படுகின்றன.எஞ்சியுள்ள, 70 லட்சம் முட்டை வளைகுடா நாடுகளான குவைத், ஐக்கிய அரபு எமிரேட், பக்ரைன், கத்தார், சவுதி அரேபியா, ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே, நாமக்கல் மண்டலத்தில் முட்டை ஏற்றுமதி சரிவடைந்து வருகிறது. 360 முட்டை கொண்ட அட்டை பெட்டியின் விலை, 26 டாலர் என்ற அளவில் நிர்ணயம் செய்தால், ஓரளவிற்கு லாபம் கிடைக்கும், ஆனால், இதனை, பாகிஸ்தான், 20 டாலருக்கு ஏற்றுமதி செய்கிறது.பாகிஸ்தானில், தற்போது கோழிப்பண்ணை தொழில் பரவலாக்கப்பட்டு, முட்டை ஏற்றுமதி ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. மேலும், வளைகுடா நாடுகளும், விலை குறைந்த பாகிஸ்தான் முட்டையை கொள்முதல் செய்வதில், அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.இதன் காரணமாகவே, முட்டை ஏற்றுமதி சரிவடைந்துள்ளது என, ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.

Click Here

Leave a Reply