இறக்குமதி செய்திகள்

விலையை சமாளிக்க தக்காளி சப்ளை செய்ய தயார்

இந்தியாவில் தக்காளி விலை உயரும் போது, அவற்றை எதிர்கொண்டு சமாளிக்க நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு வினியோகம் செய்யப்படும் என்று நோபாள நாட்டு அமைச்சர் தெரிவித்தார். சென்னையில், ‘குடும்பத்தில் தோட்டத்தின் பங்கு’ என்ற பெயரில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் நடைபெறும் கருத்தரங்கில் நேற்று பங்கேற்ற நோபாள அமைச்சர் பராஜூலி கூறியதாவது: நோபாளத்தில் ஜூன் முதல் நவம்பர் வரையில் தக்காளி மகசூலுக்கான சீசன். அவற்றை நாங்கள் கட்டுப்பாடியான விலைக்கு விற்போம். சமீபத்தில், இந்தியாவில் ஒரு கிலோ தக்காளி விலை ^80 வரைக்கும் தொட்டுள்ளது. இது போன்ற காலக்கட்டங்களில் தக்காளியை பெரிய அளவில் கொள்முதல் செய்தால், ஒரு கிலோ ^20க்கும் குறைவாக இந்தியாவிற்கு சப்ளை செய்யமுடியும். தேவையான போக்குவரத்து வசதியும் இருப்பதால் சரக்கு வினியோகம் சுமூகமாக நடைபெறும்.

சில வர்த்தகர்கள் எல்லையை கடந்து வந்து தவறான முறையில் வர்த்தக பரிவர்த்தனை செய்கிறார்கள். இதை இருநாடுகளும் ஆலோசித்து நல்ல முடிவு மேற்கொள்ளும். தரமான விதைகளை கொண்டு சாகுபடி செய் தால் அதன் மூலம் அதிக மகசூலை பெறமுடியும் என்பதை நாங்கள் எதிர்பார்க்கிறோம். நெல், மக்காசோளம், கோதுமை ஆகிய பயிர்களுக்கு தேவையான தரமான விதைகளை கொண்டு சாகுபடி செய்துவது தொடர்பான ஆராய்ச்சிகள் வரவேற்கப்படும். விவசாயித்தின் துணை தொழிலாக இறைச்சி உற்பத்தி செய்கிறோம். இதற்காக ஆட்டு பண்ணைகள் அமைக்க நோபாள அரசு 50 சதவீதம் மானியம் வழங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply