முந்திரி & பருப்பு வகைகள்

விலை உயர்வால் முந்­திரி ஏற்­று­மதி பாதிப்பு

புது­டில்லி:சர்­வ­தேச அளவில், முந்­திரி விலை தொடர்ந்து அதி­க­ரித்து வரு­வதால், அதன் ஏற்­று­மதி குறைந்து உள்­ளது.சென்ற மே மாதத்தில், ஒரு கிலோ முந்­தி­ரியின் ஏற்­று­மதி விலை, 434.86 ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.

இது, சென்ற ஆண்டு, இதே மாதத்தில்,397.42 ரூபா­யாக இருந்­தது.இதே காலத்தில், முந்­திரி ஏற்­று­மதி, 9,720 டன்னில் இருந்து 8,397 டன்­னா­கவும், அதன் மதிப்பு, 386.29 கோடி­யி­லி­ருந்து, 365.17 கோடி ரூபா­யா­கவும் குறைந்­துள்­ளது. நடப்­பாண்டு, ஏப்., – மே மாதங்­களில், முந்­திரி ஏற்­று­மதி, 15,715 டன்­னாக வீழ்ச்சி கண்­டுள்­ளது. இது, கடந்த ஆண்டு, இதே காலத்தில், 19,904 டன்­னாக இருந்­தது.

இதே காலத்தில், முந்­திரி ஏற்­று­மதி மதிப்பு, 761.96 கோடி­யி­லி­ருந்து, 683.39 கோடி ரூபா­யாகசரி­வ­டைந்து உள்­ளது.விலை உயர்ந்­துள்ள நிலை­யிலும், நாட்டின் முந்­திரி கொட்டை இறக்­கு­மதி அதி­க­ரித்­துள்­ளது. சென்ற மே மாதத்தில், இறக்­கு­ம­திக்­கான ஒரு கிலோ முந்­திரி கொட்­டை யின் விலை, 54.02லிருந்து 64.63 ரூபா­யாக உயர்ந்­தது.

இந்­நி­லை­யிலும், இதன் இறக்­கு­மதி, அளவின் அடிப்­ப­டையில், 75,660 டன்­னி­லி­ருந்து, 1,05,173 டன்­னா­கவும், மதிப்பின் அடிப்­ப­டையில், 408.68 கோடி­யி­லி­ருந்து, 679.78 கோடி ரூபா­யா­கவும் அதி­க­ரித்­துள்­ளது என, இந்­திய முந்­திரி ஏற்­று­மதி மேம்­பாட்டு குழுவின் புள்­ளி­வி­வ­ரத்தில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

Leave a Reply