பருத்தி பஞ்சு & நூல்

விளைச்சல் குறைவால் இந்தியாவில் பருத்தி ஏற்றுமதி சரியும்

நடப்பு நிதியாண்டில் (2014-2015) இந்தியாவின் பருத்தி ஏற்றுமதி 23 சதவீதம் குறையக்கூடும் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வேளாண்மைத் துறை சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: இந்தியாவில் 2013-2014ம் ஆண்டில் 37.2 மில்லியன் பேல் பருத்தி (ஒரு பேல் 170 கிலோ) உற்பத்தியானது. இது நடப்பு ஆண்டில் பருத்தி விளைச்சல் குறைந்து 36 மில்லியன் பேல் மட்டுமே உற்பத்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நடப்பு  (2014-15) ஆண்டில் 7.7 மில்லியன் பேல் பருத்தி மட்டுமே ஏற்றுமதி செய்யப்படும். இது 23 சதவீதம் குறைவானது. 2013-14ல் 10 மில்லியன் பேல் பருத்தி ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இதுவரை 8.8 மில்லியன் பேல்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

குறைவான விளைச்சலாலும், உள்நாட்டு தேவை அதிகரித்துள்ளதாலும் பருத்தி ஏற்றுமதியில் சரிவு காணப்படுகிறது. பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து மீண்டும் பருத்தி சப்ளை செய்யப்படலாம். உள்நாட்டு ஜவுளிக்கு தேவையான பருத்தி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் ஏற்றுமதி நடவடிக்கைகளை இந்திய அரசு கண்காணிக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply