காய் கறிகள் & பழங்கள்

வெங்காய விலையை கட்டுப்படுத்த ஏற்றுமதி விலை அதிகரிப்பு

வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஏற்றுமதி விலையை ரூ.30 ஆயிரமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

தற்போது வெங்காயம் உள்ளிட்ட காற்கறிகளின் விலை கிடுகிடு என்று உயர்ந்து வருகிறது. இதற்கிடையில் இந்த ஆண்டு பருவ மழை போதிய அளவு இருக்காது என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால், விளைச்சல் குறைந்து வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்க கூடும் என்று கூறப்படுகிறது. இதை கட்டுப்படுத்துவதற்காக, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இன்று 300 டாலராக இருந்த வெங்காய ஏற்றுமதிக்கான விலையை 500 டாலராக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதன் மூலம் குறைந்த பட்ச ஏற்றுமதி விலை ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் வெங்காயத்தின் விலை குறையக்கூடும் என அரசு எதிர்பார்க்கிறது. (டி.என்.எஸ்)

Leave a Reply