வணிகச் செய்திகள்

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வாயிலான வருவாய் 4.6% வளர்ச்சி

ஜனவரி முதல் ஆகஸ்டு வரையிலான எட்டு மாதங்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வாயிலான அன்னிய செலாவணி வருவாய் சென்ற ஆண்டின் இதே காலத்தை காட்டிலும் 4.6 சதவீதம் அதிகரித்துள்ளது என மத்திய சுற்றுலா துறைக்கான ராஜாங்க அமைச்சர் ஸ்ரீபத் நாயக் தெரிவித்தார்.சுற்றுலா விசாகொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஸ்ரீபத் நாயக் கூறியதாவது-சுற்றுலா விசா நடைமுறைகளை எளிதாக்கியது மற்றும் பயண அங்கீகாரங்களை மின்னணு மயமாக்கியது போன்றவை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்கவும், அன்னிய செலாவணி வருவாய் வளர்ச்சிக்கும் முக்கிய காரணமாக உள்ளன. நடப்பு ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வாயிலாக 1,274 கோடி டாலர் அன்னிய செலாவணி கிடைத்துள்ளது.நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அன்னிய செலாவணி வருவாயில் சுற்றுலா துறையின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. இத்துறையின் வளர்ச்சிக்காக உள்கட்டமைப்பு வசதிகள், விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்துதல் நடவடிக்கைகளை மத்திய சுற்றுலா அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. ஜனவரி-ஆகஸ்டு மாத காலத்தில் 46.84 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். இது, சென்ற ஆண்டின் இதே காலத்தை காட்டிலும் 7.4 சதவீதம் அதிகமாகும். 2013-ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 43.60 லட்சமாக இருந்தது.வெளிநாட்டு பயணிகள்முதல் கட்ட மதிப்பீடுகளின் படி செப்டம்பர் மாதத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை 9.2 சதவீதமும், அன்னிய செலாவணி வருவாய் 18.2 சதவீதமும் அதிகரித்துள்ளது.

Leave a Reply