இறக்குமதி செய்திகள்

வெள்ளி இறக்குமதி குறையும்

2014 ஆம் ஆண்டில் வெள்ளி இறக்குமதி கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் முந்தைய சாதனை அளவுகளையெல்லாம் மிஞ்சும் வகையில் 5,478 டன் வெள்ளி இறக்குமதி செய்யப்பட்டது. அந்த ஆண்டில் வெள்ளி விலை 36 சதவீதம் சரிவடைந்திருந்தது. எனினும் இந்த ஆண்டில் 10 சதவீத அளவிற்கு விலை சரிவிலிருந்து முன்னேற்றம் கண்டுள்ளது.

சர்வதேச அளவில் வெள்ளி பயன்பாட்டில் இந்தியாவின் பங்கு 20 சதவீதமாக உள்ளது. நம் நாட்டில் பெரும்பாலும் ஆபரணங்கள் செய்வதற்காகத்தான் வெள்ளி பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள அளவை தொழில்துறைகளிலும், முதலீட்டுத் திட்டங்களிலும் பயன்படுத்துகின்றனர். தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்த மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் இறக்குமதியாளர்கள் வெள்ளி மீது அதிக கவனம் செலுத்த தொடங்கினார்கள். சென்ற ஆண்டில் வெள்ளி இறக்குமதி அதிகரித்ததற்கு இதுவே முக்கிய காரணம்.

வெள்ளி சப்ளை அதிகரித்ததால் சென்ற ஆண்டில் விலை சரிந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.45 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. தற்போது விலை சற்று உயர்ந்து ரூ.50 ஆயிரமாக உள்ளது. தங்கம் இறக்குமதி குறைந்ததால் கடத்தல் அதிகரித்துள்ளது. மேலும் ஆபரண தொழில்துறையினருக்கு போதுமான தங்கம் கிடைக்கவில்லை என்ற புகார் உள்ளது.

2014 ஆம் ஆண்டில் வெள்ளி இறக்குமதி 25 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது என்று ஓ.பி. செயின்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அசோக் கோயல் தெரிவித்தார்.

நன்றி தினத்தந்தி

Leave a Reply