இந்திய வேளாண் பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்ய வேண்டும் என, கனடாவுக்கு, மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன் கோரிக்கை விடுத்தார்.
கனடா – இந்திய நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தில், சமநிலை இல்லாத சூழல் நிலவி வருகிறது. இதை தவிர்க்கும் வகையில், தக்காளி மற்றும் திராட்சை உள்ளிட்ட இந்திய வேளாண் பொருட்களை, கனடா, அதிகளவில் இறக்குமதி செய்ய வேண்டும்.
கனட நாட்டு முதலீட்டாளர்கள்,குளிர் சேமிப்பு கிடங்கு கட்டமைப்புகள், தொழில்நுட்பம் சார்ந்த பிரிவுகளில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என, அமைச்சர் மேலும் கேட்டுக் கொண்டார்.
வேளாண் பொருட்கள் இறக்குமதி:கனடாவுக்கு அமைச்சர் கோரிக்கை

Related tags :
Leave a Reply