அரிசி & சிறுதானியங்கள்

1.10 கோடி டன் அரிசி ஏற்றுமதி

இந்தியா மொத்தம் 1.10 கோடி டன் அரிசி ஏற்றுமதி செய்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது. செப்டம்பர் மாதத்துடன் முடிந்த 2012,13 விற்பனை ஆண்டில் மொத்தம் 1.10 கோடி டன் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. நெல் உற்பத்தி அதிக அளவில் இருந்ததும், வெளிநாடுகளில் தேவை அதிகமாக இருந்ததாலும் இந்திய அரிசிக்கு கிராக்கி இருந்தது. இதனால், அரிசி ஏற்றுமதியில் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாக அமெரிக்க வேளாண்மை துறை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.

உலக அளவில் அரிசி உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. கடந்த 2011,12 விற்பனை ஆண்டில் (அக்டோபர் முதல் செப்டம்பர் வரையில்) இந்தியாவின் அரிசி ஏற்றுமதி 1.03 கோடி டன்னாக இருந்தது.

Leave a Reply