ஏற்றுமதி செய்திகள்

12,000 இந்­திய ஏற்றுமதி பொருட்­களை நிரா­க­ரித்­தது அமெ­ரிக்கா

மத்­திய வர்த்­தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்­மலா சீதா­ராமன், லோக்­ச­பாவில் கூறி­ய­தா­வது:

பல்­வேறு கார­ணங்­களால், 2011 ஜன., – 2016 மார்ச் வரை­யி­லான காலத்தில், இந்­தியா ஏற்­று­மதி செய்த, 12,012 வகை­யான பொருட்­களை இறக்­கு­மதி செய்ய, அமெ­ரிக்க சுகா­தார கட்­டுப்­பாட்டு அமைப்பு மறுத்து விட்­டது.

அவற்றில், அங்­கீ­க­ரிக்­கப்­ப­டாத பொருட்கள், தர­மற்ற மருந்­துகள், விதி­மு­றை­களை பின்­பற்­றாத ‘பேக்கிங்’, கலப்­பட பொருட்கள், நிர்­ண­யித்­ததை விட அதி­க­மாக, பூச்­சிக்­கொல்லி மருந்து உள்­ள­தாக கூறப்­படும் உணவு வகைகள் உள்­ளிட்­டவை அடங்கும்.

தர பரி­சோ­த­னைக்குப் பிறகே, பொருட்­களை அனுப்ப வேண்டும் என, தயா­ரிப்பு நிறு­வ­னங்கள் அறி­வு­றுத்­தப்­பட்டு உள்­ளன. பேக்­கிங்கில், தயா­ரிப்பு மற்றும் காலா­வதி தேதியை, கட்­டாயம் குறிப்­பிட வேண்டும் எனவும் உத்­த­ர­வி­டப்­பட்டு உள்­ளது. இவ்­வாறு அவர் கூறினார்.

Leave a Reply