பொருள் வணிகம்

மாம்பழ சீசன் முடிவுக்கு வருகிறது

சேலம்: மாம்பழ மண்டிகள் அதிகமுள்ள சேலம் மார்க்கெட்டுக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கடந்த ஏப்ரல் முதல் மாம்பழ வரத்து துவங்கியது.

கடந்த இரண்டு மாதங்களாக இருந்து வந்த மாம்பழ சீசன் தற்பொழுது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இது குறித்து மாம்பழ மொத்த வியாபாரிகள் கூறுகையில், ‘சீசன் துவக்கத்தில் மொத்த வரத்தில் 10% மாம்பழங்கள் மட்டுமே விற்பனைக்கு வந்தது. மழையில்லாததால் மாம்பழ விளைச்சல் பாதிக்கப்பட்டிருந்தது. பின்னர் 25% மாம்பழங்கள் விற்பனைக்கு வந்தது.

இந்நிலையில், நீலம் மாம்பழ வரத்து தொடங்கினால் மற்ற மாம்பழங்களுக்கான சீசன் முடிவதாக அர்த்தம். தற்போது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால் சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து நீலம் மாம்பழம் விற்பனைக்கு வந்துள்ளது.

மொத்த விற்பனையில் இந்த மாம்பழம் கிலோ ரூ.20 வரை விற்கிறோம். சில்லரை விற்பனையில் இந்த விலை இடத்திற்கு இடம் மாறுபடும். மாம்பழ சீசன் இன்னும் ஒரு மாதத்தில் முடிந்து விடும்Õ என்றார்.

Leave a Reply