தொழில்நுட்ப செய்திகள்

28.10 லட்சம் ஜி.எஸ்.எம். இணைப்புகள்

செப்டம்பர் மாதத்தில், கிராமப்புறங்களில் ஜி.எஸ்.எம். செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை 28.10 லட்சம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து, ஊரக பகுதிகளில் மொத்த இணைப்புகள் 30.75 கோடியாக உயர்ந்துள்ளது. இந்திய செல்போன் சேவை நிறுவனங்கள் சங்கம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

நகர்ப்புறங்களில்…

செல்போன் சேவை நிறுவனங்கள் கிராமப்புறங்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. கிராம மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்து வருவதால் உயர்தர செல்போன் சாதனங்களுக்கு கிராமங்களில் வரவேற்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தகவல் தொழில்நுட்ப புரட்சியின் ஓர் அங்கமாக ஊரக இந்தியாவில் இப்போது இணையதள பயன்பாடும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

வோடாபோன் நிறுவனம், செப்டம்பர் மாதத்தில், 10.30 லட்சம் செல்போன் இணைப்புகள் வழங்கி முதலிடத்தில் உள்ளது. அடுத்து, ஐடியா செல்லுலார் நிறுவனம் 9.60 லட்சம் இணைப்புகள் வழங்கி இரண்டாவது இடத்திலும், 3.80 லட்சம் இணைப்புகளை வழங்கி ஏர்செல் நிறுவனம் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

குஜராத் மாநில கிராங்களில் அதிகபட்சமாக 9.10 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை செல்போன் நிறுவனங்கள் ஈர்த்துள்ளன. கிராமப்புறங்களில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட மாநிலங்களில் உத்தரப்பிரதேசம் (கிழக்கு) தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்குள்ள கிராமங்களில் மொத்தம் 3.24 கோடி ஜி.எஸ்.எம். வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

ஜி.எஸ்.எம்-சி.டீ.எம்.ஏ.

பார்தி ஏர்டெல், வோடாபோன், ஐடியா செல்லுலார், பீ.எஸ்.என்.எல்., ஏர்செல், யூனிநார் ஆகிய நிறுவனங்கள் ஜி.எஸ்.எம். தொழில்நுட்பத்தில் மட்டும் செல்போன் சேவை அளிக்கின்றன. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், டாட்டா டெலிசர்வீசஸ் ஆகிய நிறுவனங்கள் ஜி.எஸ்.எம்., சி.டீ.எம்.ஏ. ஆகிய இரண்டு தொழில்நுட்பங்களிலும் சேவை வழங்குகின்றன. இந்தியாவில் சிஸ்டமா ஷியாம் டெலிசர்வீசஸ் நிறுவனம் சி.டீ.எம்.ஏ. தொழில்நுட்பத்தில் மட்டும் செல்போன் சேவை வழங்கி வருகிறது.

Leave a Reply