வணிகச் செய்திகள்

3வது பெரிய பொருளாதார நாடாக முன்னேறும் இந்தியா

இன்னும் 15 ஆண்டுகளில் உலகின் 3வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா உருவாகும் என லண்டனை சேர்ந்த ஒரு அமைப்பு கணித்துள்ளது.

செபர் என்ற பொருளாதார ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜப்பானை பின்னுக்கு தள்ளிவிட்டு 3வது இடத்தை இந்தியா கைப்பற்றும் என்று கூறியுள்ளது.

சீனாவும், அமெரிக்காவும் முதல் இரு இடங்களில் இருக்கும் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது. இந்தியா தற்போது 11வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply