காய் கறிகள் & பழங்கள்

4 ஆண்டுகளுக்குப் பின் இந்திய திராட்சைக்கு ஐரோப்பாவில் அனுமதி

இந்திய திராட்சையில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம் இருப்பதாகக் கூறி, நான்கு ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவில் தடை விதிக்கப்பட்டது. தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்திய திராட்சைக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே 2013–14 பருவத்தில் திராட்சை ஏற்றுமதி கணிசமாக அதிகரிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

மார்ச் 3–ந் தேதி வரை இங்கிலாந்து உள்பட ஐரோப்பிய நாடுகளுக்கு 14 ஆயிரம் டன் திராட்சை ஏற்றுமதி ஆகியுள்ளது. முந்தைய பருவத்தின் இதே காலத்தில் 8 ஆயிரத்து 500 டன்தான் ஏற்றுமதி ஆகியிருந்தது. பூச்சி மருந்து விவகாரத்தில் 2010–11 பருவத்தில் திராட்சை ஏற்றுமதி 22 ஆயிரம் டன்னாக சரிவடைந்தது. எனினும் பிறகு படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு 2012–13 பருவத்தில் ஏற்றுமதி 56 ஆயிரம் டன்னை எட்டியது.

மகாராஷ்டிரா மாநிலம் திராட்சை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ளது. அண்மைக் காலத்தில் பெய்த கனமழையால் அங்குள்ள திராட்சைத் தோட்டங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் நல்ல விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர். ஐரோப்பா, ரஷ்யா, வங்காளதேசம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இந்திய திராட்சைக்கு தற்போது நல்ல தேவை இருப்பதாக தெரிகிறது.

நன்றி தினத்தந்தி

Leave a Reply