வணிக மேலாண்மை

46 மைல் பரப்பளவில் குளிரூட்டப்பட்ட வணிக நகரம்

துபாயில் 46 மைல் பரப்பளவில் உலகில் முதல் குளிரூடபட்ட நகரம் ஒன்றை அமைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.

உலகின் மிக உயரமான கட்டிடம் புர்ஜ் கலிபா துபாயில் உள்ளது. இதேபோல் இன்னொரு சாதனையைப் படைக்கவும் துபாய் தயாராகி வருகிறது.

இந்நிலையில் உலகின் முதல் குளிரூடபட்ட நகரம் ஒன்றை அமைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இந்த நகரம் 46 மைல்கள் பரப்பளவில் அமைய உள்ளது.

இந்த பிரமாண்ட வணிக நகரில் தியேட்டர்கள், வீடுகள் உடைய தெருக்கள் ,சுகாதார நிலையங்கள் மற்றும் நான்கு மைல் தூரம் உள்ள கடைவீதிகள் ஆகியவை அமையவுள்ளன.

இவை அனைத்துமே ஒரே கூரையின் கீழ் முழுவதும் குளிரூட்டபட்ட வசதி செய்யப்பட உள்ளது. 8 மில்லியன் சதுர அடியில் அமையவிருக்கும் இந்த மாலில் பெரும்பாலான வீடுகள், ஓட்டல்கள் ஆகியவை கண்ணாடிகளால் கட்டப்படவுள்ளன.

ஆண்டிற்கு 180 மில்லியன் சுற்றுலா பயணிகள் இந்த மாபெரும் குளிரூட்டபட்ட நகரில் அமைந்துள்ள இடத்தை பார்க்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்  தொடக்கவிழாவில் பேசிய ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்டூம், “கலாசாரம், பொருளாதாரம், சுற்றுலா ஆகிய துறைகளில் துபாய் நாட்டை மேம்படுத்துவதற்காக இந்த வணிக நகரம் கட்டப்படுகிறது” என்று கூறினார்.

இத்திட்டத்தை உருவாக்கிய துபாய் ஹோல்டிங் நிறுவனத்தின் தலைவர் முகமது அப்துல்லா கூறுகையில், “இந்த நகருகுள்ளேயே அனைத்து வசதிகளும் உருவாக்கப்படுவதால், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வாரம் முழுவதையும் இங்கேயே கழிக்கலாம் வெளியில் எங்கும் செல்லத் தேவையில்லை” என்று தெரிவித்தார்.

Leave a Reply