பருத்தி பஞ்சு & நூல்

70 லட்சம் பேல்களுக்கு மேல் பருத்தி பஞ்சு ஏற்றுமதி செய்தால் 10% வரி: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம்

அதிக அளவில் பருத்தி பஞ்சு ஏற்றுமதி நடைபெறுவதை கட்டுப்படுத்தினால் உள்நாட்டில் அதன் விற்பனை விலையை சீர்படுத்த முடியும் என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி 70 லட்சம் பேல்களுக்கு மேல் ஏற்றுமதி செய்தால் 10% வரி விதிக்கப்படும் என்றும் இதன் மூலம் நூல் விலையை கட்டுப்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதிய நிலையில் நடப்பாண்டின் பருத்தி உற்பத்தி 3.70 கோடி பேல்களுக்கு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 2.80  கோடி பேல்கள் நாடு முழுவதும் உள்ள நூற்பாலைகளுக்கு விநியோகிக்கப்படும் மேலும், 70 லட்சம் பேல்கள் ஏற்றுமதி செய்யப்படும். இதர 19 லட்சம் பேல் பருத்திப் பஞ்சு உபரியாக இருக்கும் என்றும் ஜவுளித்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply