ஏற்றுமதி செய்திகள்

பஜாஜ் ஆட்டோவின் ஏற்றுமதி 54 சதவீதம் உயர்வு

கடந்த ஆண்டின் ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஏற்றுமதி இந்த ஆண்டு ஜூலை மாதம் 54 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

கடந்தமுறை 1,10,023 வாகனங்களை ஏற்றுமதி செய்திருந்த அந்நிறுவனம் இந்த ஜூலை மாதம் 1,69,755 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது.

உள்நாட்டு விற்பனையைப் பொருத்தவரை, கடந்த ஜூலை மாதம் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2,67,841 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

2103-ஆம் ஆண்டின் ஜூலை மாத பஜாஜ் வாகனங்களின் எண்ணிக்கையான 2,46,828-உடன் ஒப்பிடுகையில் இது 9 சதவீத வளர்ச்சியாகும்.

வர்த்தக வாகனப் பிரிவில் மட்டும் அந்நிறுவனத்தின் விற்பனை 49 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் பஜாஜின் 2,81,327 வர்த்தக வாகனங்கள் விற்பனையாகியிருந்த நிலையில், இந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் 3,19,292 வர்த்தக வாகனங்களை அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

 

Leave a Reply