இறக்குமதி செய்திகள்

முதன் முறை­யாக பாமாயில் இறக்­கு­மதி குறைய வாய்ப்பு

மும்பை;சர்­வ­தேச சந்­தையில், விலை குறைந்த சோயா, சூரி­ய­காந்தி எண்ணெய் வகை­களின் வரத்து அதி­க­ரித்­துள்­ளதால், இந்­தி­யாவின் பாமாயில் இறக்­கு­மதி, கடந்த நான்கு ஆண்­டு­களில் இல்­லாத அள­விற்கு குறையும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

சோயா எண்ணெய்:நடப்பு 2013–14ம் எண்ணெய் பரு­வத்தில்.(அக். –செப்.,),பாமாயில் இறக்­கு­மதி, 8.4 சத­வீதம் சரி­வ­டைந்து, 76 லட்சம் டன்­னாக குறையும் என, ஜி.ஜி.பட்டேல் அண்டு நிகில் ரீசர்ச் நிறு­வனம் மதிப்­பிட்­டுள்­ளது. இது, முந்­தைய பரு­வத்தில், பாமாயில் இறக்­கு­மதி, 83 லட்சம் டன்­னாக இருந்­தது. கடந்த, 2009 – 10ம் ஆண்­டிற்கு பின், நடப்பு பரு­வத்தில் தான், இந்த அள­விற்கு பாமாயில் இறக்­கு­மதி சரியும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அதே சமயம், நடப்பு பரு­வத்தில், சோயா எண்ணெய் இறக்­கு­மதி, 62 சத­வீதம் உயர்ந்து, 17.5 லட்சம் டன்­னா­கவும், சூரி­ய­காந்தி எண்ணெய் இறக்­கு­மதி, 49 சத­வீதம் அதி­க­ரித்து, 14.5 லட்சம் டன்­னா­கவும் இருக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

சோயா எண்ணெய் விலை குறைந்­துள்­ள தால், அதன் இறக்­கு­மதி அதி­க­ரித்­துள்­ளது.மலேசியா:அதே­ச­மயம், இந்­தி­யாவின் பாமாயில் இறக்­கு­மதி குறைந்­துள்­ளதால், இந்­தோ­னே­ஷியா மற்றும் மலே­சி­யாவில் பாமாயில் கையி­ருப்பு அதி­க­ரித்­துள்­ளது.

இதனால், மலே­சி­யாவின் விளை­பொருள் முன்­பேர சந்­தையில், பாமாயில் விலை, 18 மாதங்­களில் இல்­லாத அளவிற்கு, 15 சத­வீதம் சரி­வ­டைந்­துள்­ளது.இத­னி­டையே, ‘எல் நினோ’வின் பருவ நிலை மாற்­றத்தால், இந்­தோ­னே­ஷியா, மலே­சியா ஆகிய நாடு­களில், எண்ணெய் பனை உற்­பத்தி பாதிக்­கப்­பட்டு, பாமாயில் விலை, மேலும் உயரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

Leave a Reply