பொறியியல் & மின்னணு சாதனங்கள்

பொறி­யியல் துறை ஏற்­று­மதி ரூ.4 லட்சம் கோடியை தாண்டும்

புது­டில்லி:நாட்டின் பொறி­யியல் பொருட்கள் ஏற்­று­மதி, நடப்பு 2014 – 15ம் நிதி­யாண்டில், 4.20 லட்சம் கோடி ரூபாயை (7,000 கோடி டாலர்) தாண்டும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.இது, கடந்த நிதி­யாண்டில், மேற்­கொள்­ளப்­பட்ட ஏற்­று­ம­தியை விட, 15 சத­வீதம் அதி­க­மாகும்.

கடந்த சில மாதங்­க­ளாக, அமெ­ரிக்கா மற்றும் ஐக்­கிய அரபு நாடு­க­ளி­லி­ருந்து அதி­க­ளவில் ஆர்­டர்கள் வந்து குவி­வதால், நாட்டின் பொறி­யியல் பொருட்கள் ஏற்­று­மதி சிறப்­பான அளவில் அதி­க­ரிக்கும் என, கணக்­கி­டப்­பட்­டுள்­ளது.இந்­தி­யாவின் ஒட்டு மொத்த ஏற்­று­ம­தியில், பொறி­யியல் பொருட்கள் பிரிவு, 5வது இடத்தில் உள்­ளது.

மேற்­கத்­திய நாடு­களில் ஏற்­பட்ட பொரு­ளா­தார மந்த நிலையால், சென்ற 2012 – 13ம் நிதி­யாண்டில், பொறி­யியல் பொருட்கள் ஏற்­று­மதி, 3 சத­வீதம் சரி­வ­டைந்து, 5,700 கோடி டால­ராக வீழ்ச்சி கண்­டது. பின்பு நிலைமை சீரா­ன­தை­ய­டுத்து, கடந்த 2013 – 14ம் நிதி­யாண்டில், இதன் ஏற்­று­மதி, 9 சத­வீதம் உயர்ந்து, 6,200 கோடி டால­ராக வளர்ச்சி கண்­டது.

Leave a Reply