ஏற்றுமதி செய்திகள்பொறியியல் & மின்னணு சாதனங்கள்

இந்தியாவின் மின்னணு சாதனங்கள் ஏற்றுமதி புதிய உச்சத்தை எட்டியது

Electronic Exports news in tamil : TamilExports

இந்தியாவின் மின்னணு சாதனங்கள் ஏற்றுமதி புதிய உச்சத்தை எட்டியது

புது டெல்லி : இந்தியாவின் மின்னணு சாதனங்கள் ஏற்றுமதி பெருந்தொற்று கோவிட்-19 சூழ்நிலையில் மீண்டது மட்டுமல்லாமல் இதுவரை எந்த மாதத்திலும் இல்லாத புதிய உச்சமாக 8,806 கோடி ரூபாயாக டிசம்பர் 2020 உயர்ந்துள்ளதாக இந்திய வர்த்தக அமைச்சகம் கடந்தவாரம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இவற்றில் மொபைல் போன்கள் ஏற்றுமதி அதிகபட்சமாக 3601 கோடியாகும். இது மொத்த மின்னணு சாதனங்கள் ஏற்றுமதியில் 35% ஆகும். இருப்பினும் பெருந்தொற்று கோவிட்க்கு முந்தைய அளவான 3254 கோடியை விட இது குறைவாகும்.

இருப்பினும் 2020 ஆம் ஆண்டு, கோவிட் சூழ்நிலையால் ஏற்பட்ட 45 நாள் லாக்டவுனில் ஏற்பட்ட வேலை முடக்கத்தால் உற்பத்தி பாதிப்படைந்தது. இதன் நீட்சியாக மின்னணு சாதனங்கள் ஏற்றுமதி 4.32% குறைந்து 73,132 கோடியாக சரிவடைந்துள்ளது.

மின்னணு சாதனங்கள் இறக்குமதி

மின்னணு சாதனங்கள் இறக்குமதி வழக்கம்போலவே அதிகமாக 3.5 லட்சம் கோடியாக இருந்தது. இவற்றில் மின்னணு சாதனங்களின் உதிரிபாகங்கள் பெரும்பங்கு வகித்தது.

மேலும், மின்னணு ஏற்றுமதி துறை கணிப்பொறி, மடிக்கணினி, டேப்லெட் ஆகியவற்றின் இலக்காக 13சதவீதமும் தொழில்துறை மின்னணு சாதனங்களிளிருந்து 22சதவீதமும் நிர்ணயித்துள்ளது.

அனைத்து மின்னணு சாதனங்கள்இறக்குமதியிலும் கணிப்பொறி, மடிக்கணினி, டேப்லெட் பெரும்பங்கு வகித்து 30,000 கோடியாக இறக்குமதி மதிப்பு இருந்தது.ஆனால் இவற்றின் ஏற்றுமதி 2020 ஆம் ஆண்டு அதலபாதாளமாக 122 கோடி மட்டுமே இருந்தது.

மத்திய அரசு ஊக்கத்தொகை

இந்நிலையில் மத்திய அரசு உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகையாக 7,350 கோடியை 4 ஆண்டுகளின் ஊக்கத்தொகையாக அறிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்பம் சார்ந்த மின்னணு சாதனங்களின் உற்பத்தியை 3.26 லட்சமாக உயர்த்துவதை இலக்காக கொண்டு இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் இந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதியிலிருந்து நடைமுறைக்கு வருகிறது.