இறக்குமதி செய்திகள்ஏற்றுமதி செய்திகள்

இந்தியாவின் சீன ஏற்றுமதி 16 சதவீதம் உயர்வு

India China : Tamil Exports News in Tamil

India China Exports – இந்தியா சீனா ஏற்றுமதி

இந்தியாவின் சீன ஏற்றுமதி 16 சதவீதம் உயர்வு

சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய ஏற்றுமதி விகிதம் 16.15% உயர்வடைந்துள்ளது, மேலும் இரும்பு, அலுமினியம், துத்தநாகம் மற்றும் தாதுப் பொருட்களின் ஏற்றுமதி உயர்வால் 2019 ஆம் ஆண்டு 17.9 பில்லியன் மதிப்பிலான ஏற்றுமதி 2020 ஆம் ஆண்டு 20.87 பில்லியன் ஆக உயர்வடைந்துள்ளது.

சீனாவுடனான வர்த்தக பற்றாக்குறை (Trade Deficit) 19.39 சதவீதம் குறைந்து. 2019 ஆம் ஆண்டு 56.95 பில்லியன் டாலர் ஆக இருந்த வர்த்தக பற்றாக்குறை 2020 ஆம் ஆண்டு 45.91 பில்லியன் டாலர் ஆக குறைந்தது.

2020 ஆம் ஆண்டு இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் (Bilateral trade) 92.89 பில்லியன் டாலரிலிருந்து 87.65 பில்லியன் டாலராக 5.64 சதவீதம் குறைந்துள்ளது.

வேளாண் ஏற்றுமதி

இந்தியாவின் முதன்மையான வேளாண் ஏற்றுமதி சிறப்பான வளர்ச்சியடைந்துள்ளது, இவற்றில் கரும்பு, சோயாபீன் எண்ணெய், காய்கறிகள், எண்ணெய் வித்துக்கள் அடங்கும்.

இருப்பினும் மாம்பழம், மீன் எண்ணெய், தேயிலை மற்றும் திராட்சை பழங்களின் ஏற்றுமதி குறைந்துள்ளது.

இது குறித்து ஏற்றுமதி நிறுவனங்களின் அமைப்பு (Federation of Indian Export Organisations (FIEO)) தலைவர் SK ஷராஃப் கூறுகையில், “இது ஒரு நல்ல அறிகுறியாக தெரிகிறது, இந்தியாவில் பெருகிவரும் தரமான ஏற்றுமதியாளர்களுக்கிடையே உள்ள ஆரோக்யமான போட்டியே இந்த வளர்ச்சிக்கு காரணம்” என்று கூறினார்

சீன இறக்குமதி சரிவு

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களான மின் இயந்திரங்கள், பாய்லர்கள், இயந்திர உதிரி பாகங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், இரும்பு பொருட்கள், உரங்கள், மோட்டார் வாகன உதிரி பாகங்கள், விளையாட்டு பொருட்கள், ரசாயனப் பொருட்கள், செராமிக் பொருட்கள் ஆகியனவற்றின் இறக்குமதி சரிவை அடைந்துள்ளது.