இறக்குமதி செய்திகள்

பட்ஜெட்டில் இறக்குமதி வரி குறைப்பில்லை: தங்கம் பவுனுக்கு ரூ.440 உயர்ந்தது

மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாததால், வியாழக்கிழமை அதன் விலை பவுனுக்கு ரூ.440 உயர்ந்தது.

இதையடுத்து சென்னையில் ஒரு பவுன் தங்கம் ரூ.21 ஆயிரத்து 720-க்கு விற்பனையானது.

மத்தியில் பாஜக ஆட்சி புதிதாக அமைந்தவுடன் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதனால் கடந்த சில மாதங்களாக அதன் விலையில் சரிவு காணப்பட்டது. இந்நிலையில், வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்க இறக்குமதிக்கு வரி குறைப்பு மற்றும் இறக்குமதி கொள்கைகளில் தளர்வு குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதன் தாக்கமாக இந்திய சந்தையில் தங்கத்தின் விலை திடீரென பவுனுக்கு ரூ.440 உயர்ந்துள்ளது. வரும் நாள்களில் அதன் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வர்த்தக நிóபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply