காய் கறிகள் & பழங்கள்

வெங்காயம் ஏற்றுமதி விலைடன்னுக்கு 300 டாலராக நிர்ணயம்

வெங்காயம் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு, அதன் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை, டன்னுக்கு, 300 டாலராக நிர்ணயித்துள்ளது.கடந்த இரு வாரங்களில், ஒரு கிலோ வெங்காயம் விலை, 15–20 ரூபாயில் இருந்து, 25–30 ரூபாயாக உயர்ந்துள்ளது.

வெங்காயம் அதிகம் விளையும் பகுதிகளில், அதன் வரத்து குறைந்ததால், விலை உயர்ந்துள்ளது. இதையடுத்து, உணவு பொருட்களின் விலையை கண்காணிக்கும், மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை, வெங்காயம் விலை உயர்வு குறித்து, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிக்கை அனுப்பியது.

இதையடுத்து, வெங்காயம் விலை உயர்வை தடுக்கும் நோக்கில், மத்திய வர்த்தக அமைச்சகம், வெங்காயத்திற்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை, டன்னுக்கு, 300 டாலராக நிர்ணயம் செய்து உள்ளது. இந்த விலைக்கு குறைவாக ஏற்றுமதி செய்ய முடியாது என்பதால், வெங்காயம் விலை கட்டுக்குள் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு, வெங்காயம் விலை, கிலோ 100 ரூபாயாக உயர்ந்தது. இதையடுத்து, வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. மேலும், செப்டம்பரில், வெங்காயத்திற்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை நிர்ணயிக்கப்பட்டது. இது, உள்நாட்டில், வெங்காயம் விலை குறையத் துவங்கியதும், படிப்படியாக திரும்ப பெறப்பட்டது.

Leave a Reply